கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நாளை(31) காலை இடம்பெறவுள்ளது.
பரவி வரும் டெங்கு நோய் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவே இவ் அவசர சந்திப்பை ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறித்த டெங்கு நோய் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள எமது சேவைகள் தொடர்பாகவும், அதனை முன்னெடுப்பதற்கு தேவையான விடையங்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.