கட்டாரில் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார சொற்பொழிவுகள்- 3 தினங்கள்

ட்டாரில் இயங்கும் SLDC – QATAR -ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் பிரபல மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி கலந்து கொள்ளும் விஷேட இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார சொற்பொழிவுகள் இன்று 30 வியாழக்கிழமை, நாளை 31 வெள்ளிக்கிழமை,நாளை மறுதினம் 01 சனிக்கிழமை ஆகிய தினங்களில் கட்டார் நாட்டில் இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில் வாராந்த ஈமானிய அமர்வு இன்று 30 வியாழக்கிழமை இரவு 09மணி தொடக்கம் 10 மணிவரை கட்டார் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் பிரபல மார்க்க பிரச்சாரகர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரியினால் 'துன்பங்களை தொடரும் இன்பங்கள்' எனும் தலைப்பில் வழமை போன்று நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து நாளை 31 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் 9.30 மணி வரை கட்டார் அல் பனாரின் பின் சைத் மண்டபத்தில் 'சுவர்க்கத்தில் அல்லாஹ்வின் தூதருடன்' எனும் தலைப்பில் பிரபல மார்க்க பிரச்சாரகர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரியும் , 'இலட்சியப் பாதையில் தடைகளும் தாண்டுவதற்கான வழிகளும் எனும் தலைப்பில் மார்க்க பிரச்சாரகர் அஷ்ஷெய்க் ஏ.சீ.கே.முஹம்மத் ரஹ்மானியும் விஷேட உரை நிகழ்த்தவுள்ளனர்.

அத்தோடு நாளை மறுதினம் 01 திகதி சனிக்கிழமை கட்டார் சனாஇய்யாவிலுள்ள பனார் மகாநாட்டு மண்டபத்தில் 'இறுதித் தூதரின் இறுதி நாட்கள் எனும் தலைப்பில் பிரபல மார்க்க பிரச்சாரகர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரியினால் விஷேட உரை நிகழ்த்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் வேண்டுகோள் விடுக்கின்றது.

கடல் கடந்து வாழும் சகோதரர்கள் முடியுமானவரை ஈமானை அதிகரிக்கச் செய்யும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஈமானிய உள்ளங்களாக மாறுவோமாக.!

கட்டாரிலிருந்து –அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -