ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு தீர்மானம் மிக்கதொரு ஆண்டு,அன்று தான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கன்னி பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.பல்வேறு தடைகளும் இடையூறுகளும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலேயே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது.
யதார்த்தவாதியாய் இன்று தம்மை காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பவாதி பஷீர் சேகுதாவூத் அன்று முஸ்லிங்களுக்கான ஏகக்குரலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க பல முயற்சிகளையும் மேற்கொண்டவர் என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அன்று இஸ்லாத்தை பரப்ப முற்படும் போது அபூஜஹல் எவ்வாறு இடையூறுகளை மேற்கொண்டரோ அதே போன்று முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியடையும் போது பஷீர் பல தடங்கல்களை ஏற்படுத்தினார்,
வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஈரோஸ் இயக்கமே கிழக்கில் சிறுபான்மையினரின் ஒரே இயக்கமாக இருக்க வேண்டும் எனவும் தமிழர்களுக்கு இயக்கத்தின் தலைவரான பாலகுமாரன் தலைவராகவும் முஸ்லிங்களுக்கு பஷீர் சேகுதாவூத் தலைவராகவும் இருக்க வேண்டும் எனவும் திட்டம் வகுத்திருந்தார்கள்,
மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் 1989 ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இந்த திட்டத்தில் மண் அள்ளிப் போடும் விதமாய் அமைந்தது.
இதனைப் பொறுக்க முடியாத பஷீர் சேகுதாவூத் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை அச்சுறுத்தியதுடன் அவர்கள் சிலரை அடித்து துன்புறுத்தவும் செய்தார்,
இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தேர்தலில் வாக்குகளை அள்ளி வழங்கி கட்சியை கிழக்கில் அமோக வெற்றியீட்டச் செய்தனர்,
பஷீரின் துரோகத்தனத்துக்கும் அடாவடித்தனங்களுக்கும் தக்க பதிலளித்த ஏறாவூர் மக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்து 6 ஆவது இடத்திற்கு தள்ளி விட்டனர்,
பஷீர் அடைந்த முதல் படுதோல்வி இது என்பதுடன் ஊர்மக்கள் அளித்த இந்தத் தோல்வி இன்று வரை பஷீருக்கு சாபக்கேடாகவே தொடர்வதுடன் இன்று வரை பஷீர் சேகுதாவூத் எனும் அரசியல்வாதி தமது 30 வருட அரசியலில் இரண்டு தேர்தல்களை தவிர வேறு எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் அன்றைய தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பஷீர் சேகுதாவூத் செய்த அட்டூழியங்களுக்கும் கொடுமைகளுக்கு பரிசாக தேசியப் பட்டியல் எம்பி பதவி ஈரோஸ் தலைவர் பாலகுமாரினால் அவருக்கு வழங்கப்பட்டது.
அப்போது பஷீரிடம் இருந்ததமு வெறும் உக்கிப் போன காரும் அவரது மனைவியின் ஒட்டடை வீடும் மாத்திரமே(இன்றை பஷீரின் ஏறாவூர் வீட்டையும் கொழும்பு 07 வார்ட் பிளேஸில் உள்ள வீட்டையும் பார்ப்பவர்களுக்கு 30 வருட சமூகப் போராளியின் போராட்டத்தின் வலிமையை புரிந்து கொள்ள முடியும்)
இந்நிலையில் தான் அரச பதவிகள் அனைத்தையும் இயக்கங்களில் உள்ளவர்கள் இராஜினமா செய்ய வேண்டுமென இயக்கங்கள் அறிவித்தன,இந்த செய்தி பஷீர் சேகுதாவூத்துக்கு பேரிடியாய் அமைந்தது,எம் பி பதவியில் ருசி கண்ட பஷீர் பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பதை அன்று பாலகுமார் உணர்ந்தார்,ஆனால் ஹக்கீம் அதை காலம் கடந்தே உணர்ந்திருக்கின்றார்,
ஈரோஸ் இயக்கம் என்னதான் பஷீரை பதவி விலக வற்புறுத்தினாலும் பதவி விலகாத பஷீர் தமது பதவியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியலை முன்னெடுக்க முன்வந்தார்,எனவே பஷீர் கட்சிக்கு துரோகம் செய்வது புதிதல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,1989 இலிருந்து பதவியை அனுபவித்த பஷீர் 1994 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் போது பதவி பறிபோகுமே என கிலி கொண்டார்.அப்போது தான் பஷீர் முஸ்லிம் சமூக உரிமைகள் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்.இதை விற்றால் தான் இலாபம் பெற முடியும் என பஷீர் நினைத்தார்,இந்நிலையில் தான் கிழக்கில் பாராளுமன்றம் செல்ல வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் தான் ஒரே வழி என்பதை உணர்ந்த பஷீர் அதற்கேற்ப காய்களை நகர்த்தத் தொடங்கினார்,
முஸ்லிம் காங்கிரஸில் பஷீர் எவ்வாறு இணைந்தார்?அவருக்கு மறைந்த தலைவர் அஷ்ரபால் கொடுக்கப்பட்ட இடம் என்ன என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்,
லதீப் முஜாஹிதீன்
ஓட்டமாவடி,
தற்போது கட்டாரிலிருந்து....