கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள்

கொழும்பில் வேலை வாய்ப்பின்றி, போதைப் பொருள் விற்பனை போன்ற சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு மருதானை அஸ்ஸபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இளைஞர்களை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய கொழும்பில் தொழிற்பயிற்சி நிலையமொன்றினை நிறுவி மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய காரணத்தால் இவர்களுக்குத் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. தொழில் இல்லாத நிலையில் இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்’ என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -