ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவையின் வேண்டுகோளிக்கினங்க ஸனாபீல் ஹைர் இஸ்லாமியா அமைப்பினால் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு இன்று 27 திங்கட்கிழமை ஒருதொகை அத்திய அவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது நுளம்பு வலை,LED லைட், சீலிங்பேன், சூரிய களத்திலான சார்ஜர்லைட் என்பன வழங்கப்பட்டன.
ஸனாபில் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஷெய்க் எஸ்.ரீ.இர்பான் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்களான திரு இன்பராஜ், எம்.ஐ.எம். இர்பான் உட்பட தாதி உத்தியோகத்தர் ஜே.எம்.அர்சாத் மற்றும் இளைஞர் பேரவை செயற்பாட்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.