ஊடகப்பிரிவு-
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரல், வைத்தியசாலை தரமுயர்த்தப்படல் உள்ளிட்ட வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்திசெய்யக்கூறி தற்போது கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
கிண்ணியா மூதூர் வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படல் உள்ளிட்ட வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திசெய்வது சம்மந்தமாக தான் பலமுறை பாராளுமன்ற விவாதங்களில் உரையாற்றியது மட்டுமல்லாமல் சுகாதார அமைச்சரிடம் நேரடியாக கலந்துரையாடியது உள்ளிட்ட தன்னால் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் சம்மந்தமாக போராட்டக்குழுவினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் இப்போராட்டத்தின் கோரிக்கைகளை ஜனாதிபதி பிரதமரின் நேரடி கவனத்துக்கு கொண்டுசெல்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.