பாடசாலையில் அரசியல் வேண்டாம் - அமைச்சர் திகாம்பரம்

மு.இராமச்சந்திரன்-
பாடசாலை சுயமாக இயங்க வேண்டும் அல்லாது அரசியல் செய்யும் இடமாக இருக்ககூடாது என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயம் சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சின் 70 லட்சம் ரூபாய் நீதியொதுக்கீட்டில் டிரஸ்ட் நிருவனதினூடாக நிர்மாணிக்கப்படவுள்ள 1500 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டிடத்திற்கானை ஆரம்ப நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் எம்.உதயகுமார். அமைச்சின் அதிகாரிகள் அட்டன் கல்வி வலய பணிப்பாளர் சிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்ட நிகழ்வில் பெயர்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தப்பின் அமைச்சல்ர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

கடந்த முறை இந்த பாடசாலைக்கு வருகைத்தந்த போது பாடசாலை அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தேன் அவ்வாறு நிதியை ஒதுக்கினேன் ஒதுக்கப்பட்ட நீதியை செயற்படுத்தவிடாது மத்திய மாகாண அமைச்சினூடாகவே அபிவிருத்தியை செய்ய வேண்டும் என சில தடைக்கலாக இருந்தனர்.

ஆதலால் காலம் கடந்த நிலையில் மீண்டும் எனது வாக்குருதிக்கமைய இன்று ஆரம்பித்துள்ளேன். நான் பாடசாலைகளில் அரசியல் செய்பவன் அல்ல மாதா பிதா குரு தெய்வம் என்பபதை மதிப்பவன் குருவை கடவுளாகவே நேசிக்கிறேன். எமது சமுதாயம் கல்விச்சமூகமாக வளர்வது ஆசிரியர்களாகிய உங்களின் கைகளிலே தங்கியுள்ளது.

தனவந்தர் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் சிறந்த பெருபேருகள் எடுப்பது பெரியவிடயமல்ல வரிய மாணவர்களை கல்வியில் வளர்ச்சியடைய செய்வதே பாராட்டப்படவேண்டியது இதுவரையில் அரசியல் பலத்தை பாடசாலைகளில் நான் பயன்படுத்தியதில்லை.

என்னை நம்பி மக்களுக்கு என்னால் முடிந்த பனிகளை முன்னெடுத்து வருகின்றேன் தொடர்ந்தும் செய்து வருவேன். அதே போல அரசியலுக்கு வருபவர்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வரவேண்டும் ஆகவே நான் மட்டுல்ல எந்த அரசியல்வாதிளாக இருந்தாலும் பரவாயில்லை அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளுங்கள் பாடசாலைகள் அரசியல் ஆதிக்கம் உள்வாங்குவது சிறந்ததல்ல.

இக் கல்லூரியில் மலசலகூடவசதிகள் குறைபாடுள்ளதாக அறிந்தேன் மலசலகூடமாது அத்தியவசியமானது எதிர்வரும் ஒருமாத காலத்தின் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து தருகின்றேன் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -