அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி யான் ஓயா சந்திக்கருகில் இன்று (10) மாலை 6.10 மணியளவில் வேகமாக வந்து கொண்டிருந்த காருடன் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய. கேதேவ. மஸ்ஸல்லாவ பகுதியைச்சேர்ந்த சின்னாகே தஸநாயக்க (55வயது) எனவும் தெரியவருகின்றது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.