முள்ளிவாய்கால் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி - படங்கள்

முள்ளிவாய்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி 2017.03.27 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 44 மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலையில் விருந்தினர்களை வரவேற்றல், ஒலிம்பிக்தீபமேற்றல், மாணவருக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சிகள், வினோதவுடை நிகழ்வுகள், பெற்றாருக்கான விளையாட்டுக்கள், என பல நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

யுத்தத்தின் பின் முள்ளிவாய்கால் கிராமத்து மக்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது அமைந்திருந்தது. சிறுவர்பாடசாலையின் ஆசிரியர்களின் வளிநடத்தலில் (செல்வி ஞா றொக்சி, திருமதி ஏ.வெல்சி, திருமதி த.சுயர்மதி) நடைபெற்ற இவ்விளையாட்டுபோட்டியில் ஜே ஆர் எஸ் எஸ் இன் இணைப்பாளர் திரு அசோக், மற்றும் அருட்சகோதரி ஜேயுலின் அவர்களும் பிரதம நபர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

பெருமளவு கிராமத்து மக்கள் கலந்து கொண்ட இன்நிகழ்வில் அழைப்பு விடுத்திருந்த பல அரசியற் பிரமுகர்கள் மக்களுக்கான முக்கிய கூட்டங்களுக்குகாக சென்றிருந்தைமையால் மக்களோடும் மகவர்களோடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -