காரைதீவு நிருபர் சகா-
காரைதீவுக்கோட்டத்தில் இம்முறை வெளியான க.பொ.த.சா.த. தரப்பரீட்சை பெறுபேற்றினடிப்படையில் 12மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுள்ளனர்.
விபுலானந்தாவில் 6பேர்!
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் 06மாணவர்கள் 9ஏ சித்திபெற்றிருப்பதாக அதிபர் தி.வித்யாராஜன் தெரிவித்தார்.
சிவஞானசீலன் லோகரமணன் சகாதேவராஜா யனோஜ் சண்முகநாதன் தனோஜன் நகுலேஸ்வரன் பிருந்தாபன் ஜெகநாதன் மதுசகன் சிவலிங்கம் லோஜிதன் ஆகியோரே 9ஏ பெற்ற மாணவர்களாவர்.
பெண்கள் பாடசாலையில் 5பேர்!
காரைதீவு இ.கி.மி. பெண்கள் பாடசாலையில் 05மாணவிகள் 9ஏ சித்திபெற்றிருப்பதாக அதிபர் செ.மணிமாறன் தெரிவித்தார்.
பேரின்பநாதன் பேணுசா இராஜேஸ்வரன் ஹம்சாயினி ஜெயநாதன் கம்ஜிகா ரவீந்திரன் முகூர்த்தனா தேவானந்தன் கிசானி ஆகியோரே 9ஏ பெற்ற மாணவிகளாவர்.
சண்முகாவில் ஒரு மாணவன்!
காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் மகேந்திரன் டிசாந்த் என்ற மாணவன் 9ஏ சித்திபெற்றிருப்பதாக அதிபர் இரா.ரகுபதி தெரிவித்தார்.