ஓட்டமாவடி: பழைய மாணவர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினரானார் சாட்டோ

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
வ்வாண்டு நூற்றாண்டு விழாவினை கொண்டா இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் சாட்டோ வை.எல். மன்சூர் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்டார். 10.03.2017 வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபரின் காரியாலயத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜனாப் ஹலீம் இஷ்ஹாக், பிரதி அதிபர் ஜனாப் கபீர், ஆசிரியர் ஜனாப் இப்றாஹிம்,பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜனாப் சுபைர், மற்றும் ஜனாப் அக்பர் ஆகியோர் முன்னிலையில் ஆயுட்கால உறுப்பினருக்கான 5000 ரூபாய்களை செலுத்தி உறுப்பினரானார்.

அத்தோடு நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தான் ஏற்கனவே அனுசரனை வழங்குவதாக பொறுப்பெடுத்துள்ள அஷ்ஷஹீட் சரீஃப் அலி ஆசிரியரின் ஞாபகார்த்தமாக இடம் பெற இருக்கும் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான முற்கொடுப்பனவினையும் பாடசாலை நிருவாகத்திடம் கையளித்ததுடன் குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் ஊடகவியலாளருமான அஹமட் இர்ஷாட்டும் ஆயுட்கால உறுப்பினராக பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -