பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய 16 வயதுடைய இளைஞனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்டன் பிரதேத்தை சேர்ந்த சி றுமியை அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பொற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான குறித்த இளைஞனை கைது செய்துள்ள பொலிஸார் 24.03.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.