1000 மில்லியன் ரூபா செலவில் ஏறாவூர் நகர பிரதான வீதி அபிவிருத்தி..!

ட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ஏறாவூர் நகர பிரதான வீதி விஸ்த்தரிப்பு பணிகளுக்கு உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறவுள்ள விஸ்த்தரிப்பு பணிகள் தொடர்பில் வர்த்தகர்கள்,கடை உரிமையளர்கள், வதிவிட உரிமையாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வும் நேற்று (28.02) ஏறாவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் அவர்களும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஏறாவூர் நகர சபை, ஏறாவூர் பிரதேச செயலகம், மின்சார சபை, நிர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம், ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இவ்வீதி விஸ்த்தரிப்பு நடவடிக்கையின்போது வர்த்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வுகள் தொடர்பிலும்; கலந்துரையாடப்பட்டதுடன் வர்த்தகர்கள் இத்திட்டதிட்டத்திற்கு புரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -