பிரான்ஸ் தூதுவர் திருகோணமலை தேசிய நீர்வழங்கல் காரியாலயத்துக்கு விஜயம்.!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர் எச்.இ.ஜீன் மெரின் சுச் நேற்று (28) திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கிழக்கு பிராந்திய சேவை நிலையத்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ் ஏழுபேர் அடங்கிய குழுவில் நீர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மற்றும் எதிர்கால நீர் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை இதன் போது மேள்கொண்டதுடன் கிழக்கு மாகாண நீர்வழங்கல் திட்டங்களை கிழக்கு உதவி பொது முகாமையாளர் என்.சுடேசன் தூதுவர் குழுவுக்கு தெளிவுபடுத்தியதுடன், 

2006 தொடக்கம் 2012 வரையான திட்டங்களை இதன்போது இன்று (01) மதிப்பிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இச்சந்திப்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதான காரியாலய மேலதிக பொதுமுகாமையாளர் திரு.ரூன்வீஸ் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் என்.சுடேசன், தென்கிழக்கு உதவி பொது முகாமையாளர் திரு.சொய்சா உட்பட திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர்களும் இதன் போது பங்கேற்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -