இக்ரா ஆங்கில கல்விநிலையத்தின் சான்றிதழ் வழங்கலும் கௌரவிப்பும்!

எம்.வை.அமீர்,யூ.கே.காலிதின்-
பிரதேசத்தில் புகழ்பெற்ற மாளிகைக்காடு இக்ரா ஆங்கில கல்விநிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாணவர்கள் மற்றும் அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் 2017-02-24 ஆம் திகதி இக்ரா கல்வி நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.அஸ்வரின் வழிகாட்டலில் கல்வி நிலையத்தின் ஆங்கில கல்விக்கான இணைப்பாளர் ஏ.எச்.அல் ஜவாகிர் தலைமையில் இடம்பெற்றது.

கோலாகலமாக இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அபூவக்கர் றமீஸ் அவர்களும் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக விரிவுரையாளர் எஸ்.எம்.சதாத், விரிவுரையாளர் என்.நஹீம், விரிவுரையாளர் எம்.பி.முஹம்மட் சிராஜ், விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஹக்கீம், நில அளவையாளர் ஏ.அர்.நைசர்கான் உள்ளிட்டவர்களும் அனுசரணையாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பெரும்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். 

நிகழ்வின்போது பிரதம மற்றும் கௌரவ அதிதி விஷேட அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களும் நினைவுச்சின்னம் வழங்கி பதக்கங்கள் அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின்போது குறித்த கல்வி நிலையத்தில் கல்விகற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவரும் கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -