மகிந்தவின் பொறிக்குள் ஹக்கீம், சந்திரிகா, ரணில், சம்பந்தன்- ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமா?

எஸ்.ஹமீத்-
புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் மற்றும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிலைமை தொடர்பில் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா ''ஆட்சியை கவிழ்க்கப்போவதாகக் கோரும் மஹிந்தவின் பொறிக்குள் எதிர்க்­கட்சி தலைவர் சம்­மந்தன் மற்றும் மங்­கள சம­ர­வீர , சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் சிக்கியுள்ளனர்.'' எனத் தெரிவித்துள்ளார்.

''புதிய அரசியல் அமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு முறையை கோரும் சம்பந்தன், அதன் பின்னர் பிர­தமர் பத­வியில் மஹிந்­தவா அல்லது ரணிலா அம­ர­வேண்டும் ­என்பதையும் தீர்­மா­னிக்­க ­வேண்டும். சம்பந்தன் கூறுவது போன்று புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம் அரசாங்கத்தில் மாற்றங்கள் நிகழலாம். மகிந்தவின் பொறிக்குள் சம்­மந்தன், மங்­கள சம­ர­வீர , சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் சிக்கியுள்ளதன் காரணமாகவே சர்வஜன வாக்கெடுப்பினை இவர்கள் கோருகின்றார்கள். ஆனால் அதற்குப் பின்னர் ஏற்படும் விபரீதங்களை இவர்கள் அறியவில்லை.'' என்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -