மருதமுனையைச் சேர்ந்த எம்.எம்.நௌபல் அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளராக நியமனம்.!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையைச் சேர்ந்த நிருவாகசேவை அதிகாரி எம்.எம்.நௌபல் அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையை 2017-02-27ஆம் அமைச்சில் பொறுப்பேற்கவுள்ளார். இறுதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நிலையிலேயே பதவி உயர்வுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் 1965 ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி மருதமுனையில் பிறந்த இவர்;.ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கற்று பின்னர் உயர்கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார்.

யாழ் பல்கலைக் கழகத்தில் கற்று வியாபார நிருவாக மானி பட்டத்தைப் பெற்று 1990ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று 1994ஆம் ஆண்டுவரை ஆசிரியராகக் கடமையாற்றினார்.பின்னர் திறந்த பல்கலைக் கழகத்தில் 'அபிவிருத்தியும்,கல்வியும்,அரச கொள்கையும்' முதுமானி பட்டத்தைப் பெற்றார்.

1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நிருவாகசேவை அதிகாரியாக நியமனம் பெற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக க்கடமையேற்றார்.அதன் பின்னர் காத்தான்குடி, பொத்துவில், ஓட்டமாவடி, கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றி மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய நிலையிலேயே பதவி உயர்வுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

நிருவாக சேவையில் விஷேட தரத்தில் உள்ளவர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மதுத்தம்பி,ஆயிஷா உம்மா தம்பதியின் புதல்வராவார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -