கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த சிறுகைத் தொழில் நிலையத்தில் பல வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சிறு கைத்தொழில் நிலையத்தில் இரண்டு மாதங்களிலேயே 20 பேருக்கு மேல் தொழில் பயிற்சி பெற்று வேலை செய்கின்றனர். எந்தச் செலவுகளும் இல்லாமல் மிகவும் இலகுவான முறையில் சாரம் நெய்வதைக் கற்றுக்கொண்டேன் என்று அங்கிருந்த 11 வயது சிறுமி கருத்துக்கூறினார். ஆனால் அச்சிறுமி ஆறாம் ஆண்டில் கல்வி கற்பதாகவும் தனது பொழுது போக்கிற்காக நாளில் சில மணி நேரங்களில் மாத்திரம் இங்கு வந்து இதனைப் பார்த்துக்கொண்டு நின்றே கற்றுக்கொண்டேன் என்று இம்போட்மிரர் மக்கள் கருத்துக்களைப் பெறும் குழுவிடம் தெரிவித்தார்.
அங்கு பெட்சீட், சாரி, சாரம், சேட் துணிகளை நெய்யும் ஏனையவர்களும் தாங்கள் விரும்பிக் கற்றுக்கொண்ட இந்த வேலை விரும்பிச் செய்யக்கூடியதாக இருக்கிறது இதன் மூலம் எங்களுக்கு நிரந்தர தொழிலாகச் செய்ய அரசாங்கத்தின் சிறு கைத்தொழில் அமைச்சும் உதவினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
இதன் உரிமையாளர் எச்.எம்.இல்மு அவர்களைச் சந்தித்தபோது:
ஊரில் ஒரு தொழில் செய்ய வேண்டும் அதனை வித்தியாசமாக ஏனையவர்களுக்கும் தொழில் வழங்கி செய்யலாம் என்ற சிந்தனையில் இருந்த நிலையில் மருதமுனையைச் சேர்ந்த ஹஸன் மெளலானா கைத்தறி நெஷவுத் தொழிலில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எங்கள் கிராமத்தில் இருந்தார் அவரை வைத்தே இந்த தொழிலை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து இன்று 15 தறிகளை இங்கே கொள்வனவு செய்து போட்டுள்ளேன். இதனால் இன்று பலருக்கு தொழில் வழங்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளன.
சந்தர்ப்பம் கிடைத்தால் இதனை இன்னும் விரிவு படுத்தலாம் இதில் வேலை செய்ய பலர் ஆவலாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.