க.கிஷாந்தன்-
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்றின் அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தமிழ் வித்தியாலயத்திற்கு சுமார் 65 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா மத்திய மாகாண விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாச்சார அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் 27.02.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது.
27.02.2017 அன்று திறந்து வைக்கப்பட்ட இப்பாடசாலை 1903ம் ஆண்டு ஆரம்பித்துள்ளதுடன், இப்பாடசாலையின் பழைய கட்டிடம் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து இக்கட்டிடம் மத்திய மாகாண அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்த புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தரம் 1 முதல் தரம் 5 வரை இயங்கும் இப்பாடசாலையில் சுமார் 79 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இதன்போது அமைச்சர் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைப்பதினையும், அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் அவர்கள் உட்பட கோட்ட கல்வி பணிப்பளார், அதிபர், ஆசிரியர்கள் இருப்பதனையும், இடம்பெற்ற நிகழ்வுகளையும், அதிதிகள் முன்வரிசையில் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.




