எனை மறந்த தேனடி..?

...எனை மறந்த தேனடி...

நெஞ்சில்
நெருக்கமாய் நின்றவள் நீயடி
நீ போட்ட மனுக்கள் எல்லாம் 
நிராகரித்தவன் நானடி
ஆனாலும்

நிலாப் பொழுதுகள் 
சாய்வதற்குள்
உன் 
சிந்தும் கண்ணீரை
ஏந்தியவன் நானடி

உன்
எதிர்கால இலட்சியத்திற்காய்
என் உணர்வுகளை 
புதைத்து ஜடமானேன் நானடி
உன்
லட்சியத்தில் கலங்கம் 
ஏற்படக்கூடாது என்பதற்காக

நீ
வெற்றி மாலை 
சூடியபோது எனக்கு
மலர்வளையம் சூட்டியதேனடி
நான்
மறந்தாலும் தினம்
மீட்டிக்கொண்டிருந்தவள் நீயடி
மறந்து போவாயென
மனதில் 
நினைக்க வில்லை நானடி

ஊர்
உலகம் என்னை
வாட்டியபோதும்
என்னோடு ஒட்டி நின்று ஒத்தடம் தந்தவள் நீயடி

ஊரும்
உறவும் வேண்டாமென
உன்னை மட்டுமே உயிராய் சுவாசித்தவன்
நானடி

தீயில்
என்னை வாட்டி எடுக்கும்
உன் ஞாபகங்கள்
என் மீது கலந்து
விட்ட பாசக்காற்றடி

விசம்
கொண்டு வாழ்ந்திருந்தால் வெறுப்பொன்று தோனுமடி
பாசம்
கொண்டு வாழ்ந்ததினால்
தினுசுதினுசா
சாகிறேன் தினம் நானடி

என்னை
மறக்கடிக்க செய்த
உன்
புதிய காதலின்
சக்தி
உன்னால் உருவாக்கப்பட்ட
உயிருக்கே விடுகதையா...? 

நீ
உனக்கு தகுதியான
காதலனை தேர்ந்தெடுத்ததில் எக்கென்ன 
சந்தோஷம்தான்... 
ஆனால்

உன்
பிரிவால் எனக்குள் அழுதுகொண்டிருக்கும்
என்
இதய கல்லறையின்
என்
ஒற்றை ரோஜா நீயடி....!

உன்னை
மறப்பதற்கு மருந்துண்டோ
கூறடி 
என்னை
எப்படி மறந்தாய் என்று 
அப்படியாவது
உன்னை மறந்தால் தானடி
உன்
புதுக் காதல் வாழுமடி...

ஆதி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -