கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்;
கிண்ணியா தம்பலகாமம் வீதி அகலமாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி யாரால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும், ஒதுக்கீட்டின் மொத்த தொகையையும் அவ்வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலையையும் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கிண்ணியா பிரதேச செயலக எல்லையைக் குறிக்கும் “கிண்ணியா” எனும் பெயர்பலகை கிண்ணியாவின் மத்தியிலுள்ள கச்ச்சகொடுத்தீவு பிரதேசத்தில் நடப்பட்டதன் நோக்கம் என்ன?இப்பெயர் பலகையை அரச வர்த்தமானியில் கிண்ணியா பிரதேச எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சிகப்பு பாலத்துக்கடியில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கமுடியுமா?
கிண்ணியா பிரதான வீதியின் இருமருங்கிலும் நீர்வடின்தோட அமைக்கப்பட்ட வடிகான்களில் நீர் வடிந்தோடாமல் தேங்கி காணப்படுகிறது குப்பைகூலங்கள் நிரம்பியுள்ளதால் அதன் செயற்பாடுகள் தடைபட்டுள்ளதை அதிகாரிகள் அறிவார்களா? இக்குறைபாடுகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய நஷ்டஈடுகள் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய முறையில் எப்போது வழங்கப்படும்?
கிண்ணியா வலையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியாயமான காரணங்களை சமர்பித்து இடமாற்றத்தை இரத்துச்செய்ய மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதை அறிவீர்களா ?ஆசிரியர்களினால் செய்யப்பட்ட மேன்முறையீடு எந்த அடிப்படையில் நிராகரிக்கப் பட்டது என்பதை அறியத்தரவும்.
வானாறு ,ஆயிலடி, கற்குழி, சூரங்கள், கச்ச்சகொடுதீவு போன்ற கிராமங்களிலிருந்து கிண்ணியா நகர்புற பாடாசாலைகளில் கல்வி கற்கவரும் மாணவர்களின் நலன்கருதி காலை நேரத்தில் பஸ் சேவை நடாத்துவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவும்.
சூரங்கல்லில் அமைந்துள்ள கிண்ணியா நெற்களஞ்சிய சாலைக்கு இலகுவாகச் செல்லவதற்கு வான்எல கிண்ணியா பிரதான வீதியூடாக வீதியொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா?
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அப்துல்லா மஹ்ரூப், கௌரவ தௌபீக் ,கௌரவ துரைரட்ண சிங்கம், கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


