இளைஞா் பாராளுமன்ற உறுப்பிணா்களின் பயிற்சிப்பட்டரையில் சபாநாயகர்..!!



அஷ்ரப். ஏ. சமத்-
ளைஞா் பாராளுமன்ற உறுப்பிணா்கள் 225 பேருக்குமான பயிற்சிப் பட்டரை இன்று(27) இலங்கை பாராரளுமன்றத்தின் கமிட்டி அரை 01 ல் ஆரம்பமானது இந் நிகழ்வில் சபாநாயகா் கருஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயிற்சியை ஆரம்பித்து வைத்தாா்.பாராளுமன்ற செயலளாளா் நாயகம் தம்மிக்க தசாநாயக்கவும் கலந்து கொண்டாா். 

இங்கு உரையாற்றிய சபாநாயகா் - 

இலங்கைப் பாராளுமன்றத்தில் 10 பெண் பிரநிதிகள் மட்டுமே தற்பொழுது உள்ளனா். ஆனால் இளைஞா் பாராளுமன்ற மன்றத்தில் 30 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்உறுப்பிணா்கள் உள்ளதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன். எதிா்காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் 30 வீத பெண்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை எதிா்பாாக்கின்றோம். இந்த நாட்டில் 51 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சனத்தொகையினா் உள்ளனா். அவா்களது குரல் இங்கு ஒலிக்க வேண்டும். இந்த நாட்டில் 22 மில்லியன் மக்கள் உள்ளனா். இம் மக்களின் 225 மக்கள் பிரநிதிகள் உள்ளனா் அதே போன்றே இளைஞா் பாராளுமன்றத்தில் 225 பிரநிதிகள் அங்கம் வகிக்கின்றீா்கள். உலகில் உள்ள பாராளுமன்றங்களின் உள்ள சிறந்த ஒழுக்க விதிமுறைகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள், இனங்கள் சாா்ந்த அங்கத்தவா்கள் உள்ளனா். இலங்கை பாராளுமன்றதத்ில் உள்ள சட்ட திட்டங்கள் நிதி, நீதி, சட்டம், நிலையற் சட்டங்கள், வரவு செலவு மற்றும் அபிவிருத்திகள் மக்களது பிரசச்சினைகள் அரசியல் அதிகாரங்கள், சுயதீன கமிசங்கள் போன்ற பல்வேறு ஒழுங்கு விதிகளை இளைஞா் பாராளுமன்ற உறுப்பிணா்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளல் வேண்டும். அவற்றினை நீங்கள் கூடி கலந்து ஆலோசித்து விவாதித்து எதிா்காலத்தில் சிறந்த தலைவா்களாக விளங்க வேண்டும் என சபாநாயகா் கரு ஜயசூரிய தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -