அக்கரைப்பற்றில், அரச காணிகளை மீட்க பிரதேச இணைப்புக் குழு நடவடிக்கை

ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று
க்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சட்ட விரோதமாக தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரச காணிகளை மீட்க அக்கரைப்பற்று பிரதேச இணைப்புக் குழு நடவடிக்கை.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அரச திணைக்களங்களின் அலுவலகம் உட்பட பல்வேறு பொது தேவகைளுக்கு நிலமில்லாமல் அரச அலுவலகங்கள் அமைக்க முடியாத நிலையில் அரச தேவை உட்பட பொதுத் தெவைகளுக் கென்று ஒதுக்கப்பட்ட அரச காணிகளை சிலர் திட்டமிட்டு ஆக்கிரமித்து வீடமைத்தல் உள்ளிட்ட தனது சொந்த தேவைகளுக்கு பயன்புடுத்துவதைத் தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பாளரிடமிருந்து அக்காணிகளை மீட்டு அரசதேவைக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழு இன்று தீர்மானித்துள்ளது

இந் நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் தலைமையில் குழு வொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அரச திணைக்களங்கள் பல சொந்தக் கட்டிடமின்றி தனியார் கட்டிடங்களில் பல்வேறு அசௌகியங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றத.

அதே நேரத்தில் பிரதேசத்திலுள்ள அரச காணிகள் எவ்வித அனுமதியும் இன்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் நீண்ட காலமாக அசஅதிகாரிகளும் பொது மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதமாகசெய்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது . அதகைக்கருத்தில் கொண்ட மேற்படி தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்;கிழமை (27) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது

பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத் ;தலைவர்களான சுகாதார, போஷாக்கு, சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைஸால் காசிம் (எம்.பி.) மற்றும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமா லெவ்வை (எம்.பி.சி) ஆகியோர் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் ;கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ((எம்.பி.சி), மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் மற்றும் பிரதேச செயலாள் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லெத்தீப, உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்எம்.றஸ்ஸான், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏஎம்.தமீம், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்அஸ்மி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வை.எம்.ஸவாஹிர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏஎல்எம்.காசிம் உட்பட பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசனம் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகரசபை உள்ளிட்டவைகளின் பொறியியலாளர்கள உட்பட பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதலியோர் கலந்து கொண்ட இக் கூட்டத்திலேயே மேற்படி திர்மானம் எடுக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -