மீண்டும் கல்முனைக்கு வருகிறது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் காரியாலயம்!

ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-

அம்பாறைக்கு மாற்றப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாணக்காரியாலயத்தை மீண்டும் கல்முனையில் அமைப்பதற்கான இடத்தினை கல்முனைத்தொகுதிற்குட்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (27) திங்கட்கிழமை பார்வையிட்டார்.

கல்முனையில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் காரியாலயத்தினைஅமைச்சர் தயாகமகேவின் இனவாத செயற்பாட்டினால் திட்டமிடப்பட்டு அம்பாறைக்குமாற்றப்பட்ட விடயத்தை பிரதி அமைச்சர் ஹரீஸ் கடந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போதும் நேரடியாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோரளவின் கவனத்திற்கு கொண்டுவந்ததையிட்டும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கினங்கவும் மீண்டும்கல்முனையில் மேற்படி காரியாலயத்தினை அமைப்பதற்கு அமைச்சர் தலதா அத்துக்கோரளஉறுதியளித்திருந்தார்.

அமைச்சர் தலதா அத்துக்கோரளவின் பணிப்புரைக்கமைவாக மேற்படி காரியாலயத்தினைகல்முனையில் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கித்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புபணியகம் உத்தியோகபூர்வ கடிதத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாணக் காரியாலயத்தை சகல வசதிகளுடன் கூடியவாறு புதிதாக நிர்மாணிப்பதற்கு சாய்ந்தமருது வொலிவேரியன்பிரதேசத்தில் நிரப்பப்பட்ட காணியினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டதுடன்இக்காரியாலய நிர்மாணத்திற்கு 100 பேச் காணி ஒதுக்குவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயலாளர்ஐ.எம்.றிகாஸ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், காணி உத்தியோகத்தர் எம்.ஹஸ்மி உள்ளிட்டஉத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் காரியாலயம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டதைத்தொடர்ந்து இக்காரியாலயத்தினை மீண்டும் கல்முனைக்கு கொண்டுவரும் முகமாக பிரதிஅமைச்சர் ஹரீஸ் தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதுடன் இவ்விடயம்தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிறைவேற்று பணிப்பாளருடன் பிரதிஅமைச்சர் முரண்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -