அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் வழங்குதல் சம்மந்தமாக கட்சித்தலைவரால் வழங்கப்பட்டு வரும் வாக்குறுதி சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தளம் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் நசீரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கட்டாயம் வழங்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகத் திகழும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குதல் இன்றய கட்டாயத்தேவையாக இருக்கிறது ஆனால் இன்றய கட்சியின் நிலைமையினைக் கருத்தில் கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலிக்கு முதலில் வழங்கிவிட்டு மீதமுள்ள திருகோணமலைக்கு இரண்டு வருடங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தேசியப்பட்டியலின் மீதிப் பகுதியை வழங்குதல் கட்டாயம் என்று என்று கருத்தினைத் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
