மூதூர் நௌபால்டீன் நற்பணி மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வும் கலந்துரையாடலும்..!

மூதூர் நௌபால்டீன் நற்பணி மன்றத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு சமூக சேவையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் வைபவமும் மற்றும் புதிய ஆண்டில் மன்றத்தின் புதிய செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலும் மூதூர் சாரா கல்யாண மண்டபத்தில் கடந்த 11/12/2016 ஆம் திகதி மிகச் சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி லாகிர் மற்றும் சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் பாயிஸ், மூதூர் பிரதேச சபை செயலாளர் நஜாத் ஆகியோரும் மற்றும் ஊடகவியலாளர்கள் சமூக சேவையாளர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தருணத்தில் மன்றத்தின் உயர்வுக்காக என்னுடன் உறுதுணையாக இறுதிவரை பயணித்த மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஊக்கமூட்டிய உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிப் பூக்களைத் தூவுகின்றேன்.
அன்புடன் இஸ்மாயில் நெளபால்டீன்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -