அவதூறுகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற நீதிச்சேவை அதிகாரிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இணையத்தின் ஊடாக அதிகமாக அவமானப்படுகின்ற நபர் நானாகவே உள்ளேன் என தெரிவித்த ஜனாதிபதி, அந்த சாதனையை யாராலும் உடைக்க முடியாது என தெரிவித்தார்.
அவதூறான விடயங்கள் வெளியிடப்படுவதை தவிர்க்க சட்ட ரீதியான முறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
