போலியான நாமல் ராஜபக்சவை உடன் கைது செய்யவும் - நீதிமன்றம் உத்தரவு

போலியான நாமல் ராஜபக்சவை உடன் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி கிஹான் பிலபிட்டிய இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவென தன்னை அறிமுகம் செய்து, முன்னாள் விமானப்படைத் தளபதி ஹர்ஷ அபேவிக்ரமவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் அம்பாறை நகர சபையின் முன்னாள் தலைவரையே இவ்வாறு கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு சமூமகளிக்காமையினால் பிரதி வாதியை உடன் கைது செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு கடந்த 2011 மார்ச் மாதம் 28 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் இந்த தொலைபேசி அழைப்பை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -