விடியல் தேடிய உன் இரவுகளுக்குள்..!

விடியல் தேடிய-உன் இரவுகளுக்குள் 
எஞ்சி இருக்கும் பொழுதுகளில் 
ஒழிந்து கிடக்கிறது-
உன் நாழிகைகள்... 

கண்களை இறுக மூடி 
பஞ்சனத்தில் படுத்துறங்கிடாதே 
இறுக மூடிய கண்களுக்குள் 
பூபாலத்தின் சிவந்த பொழுதுகளின் 
சூரியனின் முகத்தில்-
உன் விடியலின் கனவுகள் மெய்பட 
கன் விழித்தே தூங்கு-

உன் கூடாரம் களவு போவதற்குள்... 
உன் லட்சியக் கொடி பறக்க
 பசியும் ரணங்களும் வியர்வைகளும் 
சுகங்களும் ஆளார்தி பூரமாகட்டும்... 

வயதுக்கு வராத-என் வரிகளும் 
விடியல் தேடும் உன் புரட்சயும் 
மானுடவியல் மனுநீதிச் சோலனாய் 
மாறட்டும்... 

உன் உணர்வுகளையும் உன் தேசத்தையும் 
குற்றாலமாக்கிய கண்ணீருக்கும் 
தோழ்விக்கும் விடுதலை கொடு 
உன் விவேகத்தால்... 

வீடும் நாடும் உனக்காய் தவம் கிடக்கிறது 
நாதியற்ற நாளைய தலைமுறையின் 
செல்லரித்துப்போன கர்ப்ப கிரகம் 
உன்னால் கருக்கொண்டு 
நிமிர்ந்து நிற்கட்டும்.... 

உன்னை சிறையிட்டு வைத்திருக்கும் 
தீமைகளை வேரறுத்து 
கண்ணீர் பூக்களை உணர்ச்சி பூக்களாக்கி 
அவநம்பிக்கைகளுக்கு அவமானம் கொடுத்து 
தீக்குச்சியின் முழு வடிவமாயிரு... 

தகுதியும் திறமையும் படிப்பு மட்டுமே
 என நினைத்து சரிந்து வீழ்ந்து விடாதே... 
என் சினேகா இளைஞனே!!! 

உன் விவேகம் போதுமடா 
கடல் தாண்டிய பறவைகளுக்கு 
இடையிடையே மரங்கள் இருப்பதில்லை 
ஆனாலும் 
அது பல கண்டங்கள் தாண்டியது எப்படி...? 

அன்று பேபர் பையன் இன்று 
உலக கொடியையே தனக்காக 
அரை கம்பத்தில் பறக்கச்செய்த 
பார் போற்றும் நம்-கலாம் அய்யா 

அன்று ஓலை குடிசையும் 
ஒட்டிய வயிறுமாய் இன்று 
உலக நாயகனாக உலா வரும் ஒபாமா..சார் 
இவர்களை விடவுமா இளைஞனே 
உனக்கு உதாரணம் வேண்டும்... 

தகுதி திறமை நிறையவே இருக்கிறது 
உனக்குள் 
தன்னம்பிக்கை என்னும் தும்பிக்கையால் 
கடமை,நேர்மை,சிக்கனம் தாராளம்,தன்னை 
ஆளும் சிறகுகள் விரித்து 
பரந்து விரிந்த மண்ணில் தட்டிப்பறந்து 
வெற்றிக்கொடி எனும் புரட்சிக்காய் 
கனவுகள் கான் 

எஞ்சிய நாழிகைகள் உனதாகும் 
விடியலில் 
தூரிகையின் தொட்டில் உனதே.... 
என்றும் வாழ்க வளமுடன் 

-அன்புடன் கவிப்பிரியன் ஆதில்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -