ஊடகங்களினால் எனக்கு அடித்தல் நானும் திருப்பி அடிப்பேன் எனவும் அதுவும் நான் திருப்பி அடிப்பது பகிரங்கமாக பேச்சினால் மாத்திரமே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமனறத்தில் தெரிவித்தார்.
ஊடக நிலையங்களுக்கு தீ வைப்பது, ஊடகவியலாளர்களை கடத்துவது போன்ற விடயங்கள் எனக்கோ ஜனாதிபதிக்கோ தேவை இல்லை என சுட்டிக்காட்டினார்.
தானும் ஜனாதிபதியும் ஊடகங்கள் விடும் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுவோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை ஊடகவியலாளர் கடத்தல், கொலை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற அடக்குமுறைச் சம்பவங்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெறாவிட்டாலும், ஊடகங்கள் மீதான அடக்குமுறையின் இன்னுமொருபோக்கு காணப்படுகிறது’ என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமனறத்தில் தெரிவித்தார்.
