மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எம்.எம்.இஸ்ஸதீன் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதிவானாக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைரின் இணைப்புச் செயலாளரான எம்.எம்.இஸ்ஸதீன், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன், றஹ{மா அமைப்பின் செயலாளரும் ஆவார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மொஹமட் றுஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
