புல்மோட்டை அரிசிமலைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட சகோதரர் ஜவ்பார் மற்றும் முத்தலிப் என்பவரின் இரு வீடுகளையும் விடுவிப்பதாக பாதுகாப்பு அமைச்சில் இருந்து 20.10.2016 ம் திகதி தனக்கு தொலைபேசியினூடடக அறிவித்தல் கிடைக்கபெற்றதாக குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார் மேலும் குறித்த புல்மோட்டை கடற்படை கட்டளையிடும் அதிகாரிக்கு உரிய கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 24.10.2016(திங்கள்) உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் கையளிப்பதாகவும் பிரதேச செயலாளர் கூறியதாக குறிப்பிட்டார்.
புல்மோட்டை அரிசிமலைப் பிரதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு நிஹார்ப் நிறுவனத்தால் சுனாமியால் பாதிக்கட்ட 03 பயனாளிகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டில் காலித் என்பரின் வீடு கடந்த பெப்ரவரி மாதமளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் பாரிய முயற்ச்சியினால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மிகுதியாகவுள்ள இரன்டு வீடும் விடுவிக்கப்படாத நிலையிஅனைவருக்கும் ிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் எம் அன்வர் கிழக்கு மாகாண சபைக்கு பிரேரணையாகவும் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு போன்றவற்றுக்கும் கொண்டு சென்றமையும் குறித்த கூட்டங்களின் போது கிழக்கு மாகாண முதல் அமைச்சர் மற்றும் மாவட்ட பாராளுமனற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் குறிப்பாக இது விடயமாக பாராளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாற்றிய ஸ்ரீ இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அது தொடர்பாக உரையாற்றிய திருகோணமலை மாவட்ட பாராளுமனற உறுப்பினர்கள் உட்பட எமது புல்மோட்டை பிரதேச அரசியல் பிரதிநிதிகள் அனைவர்க்கும் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் .அன்வர் தெரிவித்தார்.