கிண்ணியா: மகனின் தாக்குதலினால் தந்தை அப்துல் ரவூப் மரணம் - மகன் விளக்கமறியலில்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மகனின் தாக்குதலினால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை நேற்று மாலை (05) திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா- ஆலங்கேணி, சமாஜந்தீவு பகுதியைச்சேர்ந்த அப்துல் ரவூப் (45வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது. கடந்த 09ம் மாதம் 04ம் திகதி உயிரிழந்தவரின் மகனான ரவூப் முஜீப் (26 வயது) தந்தையின் தலைக்கு பொல்லால் தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதே நிலையில் தந்தையை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -