நிந்தவூர் பிரதேச சிறுவர் தின நிகழ்வுகள் - பிரதேச செயலாளர் பிரதம அதிதி

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களின் சிறுவர் தின நிகழ்வு இன்று நிந்தவூர் அல்-மதீனாமகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம் பெற்றது.

நன்நடத்தைகள், சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் சம்மாந்துறை அலகுக் காரியாலய ஏற்பாட்டிலான இந்நிகழ்வில்நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள 13 பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களின் சிறுவர், சிறுமியர்கள் பங்கு கொண்டுமகிழ்ந்தனர்.

இதில் சிறுவர்களுக்கான 50 மீற்றர் ஓட்டம், நீர் நிரப்புதல், தவளைப் பாய்ச்சல், நிறங்கள் தெரிவு செய்தல், பலூன்உடைத்தல், பனீஸ் உண்ணல், தேசிக்காய் ஓட்டம், தாரா ஓட்டம், வினோத உடை போன்ற பல்வேறு சுவையானநிகழ்வுகளும் இடம் பெற்றன.

சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்புத் திணைக்களத்தின் சம்மாந்துறை அலகுக் காரியாலய பொறுப்பதிகாரிஎம்.சீ.முகம்மட் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர்ப் பிரதேச செயலாளர் திருமதி.றிபாஉம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சிறுவர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அல்-மதீனா மகா வித்தியாலய அதிபர் எம்.சரீப்டீன், சிரேஷ்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள்,பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களின் முகாமையாளர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான பொதுமக்களும், பெற்றோர்களும் இந்நிகழ்வுகளைக் கண்டு கழித்து மகிழ்ந்தனர்.

பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இன்றையச் சிறுவர்கள் நாளையத்தலைவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இவர்களைச் சிறந்த மார்க்க அறிவுள்ள, ஒழுக்கமுள்ளகுழந்தைகளாக வளர்த்தெடுப்பது பெற்றோரின் தலையாய கடமையாகும்' எனத் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -