முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு (8) சனிக்கிழமை.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வொன்று சனிக்கிழமை (08) காலை 8.30 மணிக்கு கொழும்பு டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆரம்ப உரையை அமைச்சர் ஹக்கீம் ஆற்றுவதோடு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தின உட்பட துறைசார் வல்லுநர்கள், வளவாளர்கள் தேர்தல்களில் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்பன தொடர்பில் உரைநிகழ்த்துவர்.

இதற்கு கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாடெங்கிலிமிருந்து அரசியல் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் செயலமர்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் உட்பட ஏனைய முக்கிய முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -