தவறை ஒப்புக்கொண்டு மீண்டும் அதாவுல்லாஹ்வுடன் இணைந்தார் அமீர்...!

ஜே.எம். வசீர்-
’நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படவுள்ள இந்த தருணத்தில் கிழக்கு மாகாண மக்களின் இறைமை ,பாதுகாப்பு அரசியல் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக நாம் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ .எல்.எம் அதாஉல்லா அவர்களை பலப்படுத்தவேண்டும்’ என தேசிய காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர் எம் .எல்.ஏ அமீர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

தேசிய காங்கிரஸினால் அவருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணை முடிவுறுத்தப்பட்டு அவர் தொடர்ந்தும் கட்சிப்பணிகளில் ஈடுபடுகின்றமை தொடர்பான அவரது அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தேசிய காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தனது தனிப்பட்ட காரணங்களினால் ஈடுபட முடியாமல் போனமைக்காக தான் மனம் வருந்துவதாகவும் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உயர் பீடத்திட்டம் தனது தவறை ஏற்றுக்கொண்டு தான் மன்னிப்பு கோரியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட உயர் பீடம் தன்னை கட்சி நடவடிக்கைகளை தொடருமாறு கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .

கடந்த பாராளுமன்றத் இடையில் ஏற்பட்ட இடைவெளியை தேர்தலின் பின்னர் தனக்கும் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியை குறைத்து கட்சியின் செயற்பாடுகளை தொடருவதற்காக 23.09.2016 ஆம் திகதி நடை பெற்ற கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் தான் கலந்து கொண்டு தனது நிலைப்பாடுகளை விளக்கியத்துடன் கட்சிப் பணிகளை தான் ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . தேசிய காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு அமையவே எதிர்வரும் காலங்களில் மாகாண சபை நடவடிக்கைகளிலும் தான் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -