ஏறா­வூர் இரட்டைப் படு­கொலை : 800 பேரிடம் விசாரணை, 17 பொலிஸ் குழுக்கள், 80 CIDயினர் களத்தில்

றா­வூரில் இடம்­பெற்ற இரட்டைப் படு­கொலைச் சம்­பவம் தொடர்­பாக இது­வரை 800 இற்கும் மேற்­பட்டோர் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுமார் 50 பேரிடம் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பல்­வேறு கோணங்­களில் இடம்­பெற்று வரும் இந்த விசா­ர­ணை­களில் இது­வரை சந்­தே­கத்­திற்­கி­ட­மான பலர் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தோடு வாக்­கு­மூ­லங்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இக்­கொலைச் சம்­ப­வத்­தோடு தொடர்­பு­பட்­ட­தாக கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு மற்றும் இதர குற்றச் செயல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட சூத்­தி­ர­தா­ரி­களை விசா­ரணை செய்து மேலும் அவர்­க­ளுக்­குள்ள குற்றச் செயல் வலைப்­பின்­னலை அறிந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது என்று மட்­டக்­க­ளப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தினேஸ் கரு­ணா­னா­யக்க உறு­தி­படத் தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் ஏறா­வூரில் இடம்­பெற்ற இரட்டைப் படு­கொ­லைக்கும் அப்­பாற்­பட்­ட­தாக பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யோடு சம்­பந்­தப்­பட்ட பல்­வேறு விசா­ர­ணை­களை தாங்கள் பல்­வேறு கோணங்­களில் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்­கி­ணங்க கொலை­யா­ளி­களைத் தேடி 17 விஷேட பொலிஸ் குழுக்­களும் 80 இற்கு மேற்­பட்ட புல­னாய்வு உத்­தி­யோ­கத்­தர்­களும் புலன் விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இக்­கொ­லைகள் தொடர்­பாக இது­வரை 6 பேர் கைது செய்­யப்­பட்டு ஒக்­டோபர் 05 ஆம் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகர் முகாந்­திரம் வீதி முத­லா­வது ஒழுங்­கையில் உள்ள வீட்டில் ஒன்­றாக வசித்து வந்த நூர்­மு­ஹம்­மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவ­ரது திரு­ம­ண­மான மக­ளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
நன்றி விடிவெள்ளி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -