அலி உதுமான் யாரன கேட்பவர்கள் அமைச்சர்களாக உள்ள காங்கிரஸால் மரம் தான் நட முடியும் - அஸ்மி ஏ கபூர்

லி உதுமான் சேர் யார்? இந்த சமுத்திற்காக எப் பெரும் தியாகங்களை செய்தவர்? அவருடைய தியாகம்தான் என்பது பற்றி அவரை எங்கள் சிறுவயது முதலே அறிந்திருக்கிறோம்.

சமுகத்தின் விடுதலை விருட்சத்தை நடுவதற்காக தன்னை இம்மண்ணுள் உரமாக்கிய பெரும் தியாகி தமிழ் பாசிச வாதத்துடன் அவர்களின் சுடுகலன்களுக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொன்ன தலைவன் தமிழ் பாசிச போரளிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே சேரை நாம் இழந்து தவிக்க காரணமாகியது. தனது குடும்பத்தை மட்டுமல்ல வட,கிழக்கு முஸ்லீம்களை அனாதையாக்கி சென்றார். இன்று அந்த பாசிச வாத ஆதரவு தளத்துடன் நட்பு பாரட்டும் சர்வதேச தரகர்களின் ஒற்றர்கள் அலி உதுமான் சேரை நினைவு கூறுகிறார்களாம். அவர் போன்ற தியாகிகள் இந்த சமுகத்தின் மீது வைத்த பற்றுதலே இன்று நீங்கள் அனுபவிகின்ற சுக போகங்களுக்கு காரணமாகும்.

அவர்கள் செய்த தியாகம் விடுதலை பெற்றுக் கொள்ள விருட்சங்களை மக்கள் மனங்களில் விதைத்தார்கள் இன்று அவர்களின் பெயரை சொல்லி சில்லறை தனமான அரசியல் செய்கிறீர்கள். மரம் எப்போது வேண்டுமென்றாலும் யார் வேண்டுமானாலும் நட முடியும் ஆனால் சமுகத்தின் குரலாகவும் அதன் தேவைகளை நிறைவு செய்யவும் தான் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை குறுகிய அரசியல் நகர்வுகளுக்காக பயன்படுத்த வேண்டாம்.

அந்தத் தியாகியின் மகனை அடையாளம் தெரியாத அலி உதுமான் சேரை யாரன தெரியாத மு.கா அடிப்படை தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அலங்கரித்து விட்டு இன்று அவரை எதற்காக நினைவு கூறுகிறீர்கள்.

(கீழே உள்ள வாசகம் சகோ வைத்தியர் அலி உதுமான் அலி அக்ரம் எனது ஒரு பதிவுக்காக இட்ட பின் இடுகை)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -