இறக்காம கோட்டத்தில் ஏற்பட்டிருக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் -உதுமாலெப்பை

சலீம் றமீஸ்-

றக்காம பிரதேச கல்விக் கோட்டப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடயங்களை நிரப்புவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை

இறக்காம கோட்டப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு.சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரனை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது......

சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட இறக்காம பிரதேச கல்விக் கோட்டம் கஷ்டப் பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும். இறக்காமம், வரிப்பத்தான்சேனை, வாங்காமம், இழுக்குச்சேனை, மஜீட் புரம், குடுவில், மாணிக்க மடு போன்ற கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் நீண்ட காலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன. இப்பிரதேச பாடசாலைகளில் 02 வருட சேவையினை நிறைவு செய்து தங்களின் பழைய பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இடமாற்றங்கள் வழங்கப்பட்டதால்தான் இப்பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் போதும் புதிய ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் போதும் இறக்காம பிரதேசத்தைச் சேரந்த ஆசிரியர்களுக்கு இறக்காமப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்வதுடன், இறக்காமப் பிரதேச ஆசிரியர்கள் பற்றாக் குறையை நிபர்த்தி செய்யவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் இன்று இச்சபையில் பேசும் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுனரா? அல்லது தண்டாயுதபாணியா? எனக் கேள்வி கேட்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சை வேறு ஒருவர் கையாள்வதாகக் கூறினார். எங்களைப் பொறுத்தவரை கிழக்கு மாகாண கல்வி அமைச்சை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபாணி சிறப்பாக வழி நடாத்துவார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உதவி செயலாளராகவும், மாகாணப் பணிப்பாளராகவும் கடமை புரிந்து அனுபவம் பெற்றவர். இருந்தபோதிலும் அமைச்சருக்கு தெரியாமல் சில சம்பவங்கள் கல்வி அமைச்சில் நடைபெற்று வருகின்றன. கிழக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களை வேண்டி நிற்கும் நாம் நமக்கு கிடைத்துள்ள அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும். மக்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டுவரும் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களிடமே நாங்கள் கோரிக்கை விடுப்போம்.

கிழக்கு மாகாணத்தில் விசேட இடமாற்றம் திட்டத்தின் கீழ் 576 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இவ் ஆசிரியர் இடமாற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது பொத்துவில், இறக்காமம், கல்குடா போன்ற பிரதேச ஆசிரியர் பற்றாக் குறையை தீர்க்கும் முகமாக இப்பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இது தொடர்பாக பதில் அளித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.எஸ்.தண்டாயுதபாணி இறக்காமப் பிரதேசத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -