சீரற்ற காலநிலை தற்போது சுமுக நிலைக்கு வந்துள்ளது..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
டந்த இரு வாரங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை தற்போது சுமுக நிலைக்கு வந்துள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த பல பிரதேசங்களில் இருந்து நீர் முற்றாக வடிந்துள்ளதுடன் தாழ்வான ஒருசில இடங்களில் நீர் தேங்கியிருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறு நீர் வடிந்து சென்ற நிலையில் வீட்டு உரிமையாளர்கள் தத்தமது வீடுகளுக்குச் சென்று வீடுகளையும், வீட்டுச் சுற்றாடல்களையும் சுத்தம் செய்வதை இன்றும் (26) வெல்லம்பிட்டி, மெகட கொலன்னாவ, வென்னவத்தை, சேதுவத்தை, ஹித்தம்பகுவ, பிரண்டியாவத்தை போன்ற இடங்களில் மக்கள் ஆர்வத்துடனும், தமது பொருட்கள் அழிவடைந்து விட்டது என்ற கவலையுடனும் சுத்தம் செய்வதை அவானிக்க முடிந்தது.

ஒருசில பகுதிகளில் அரச மற்றும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் தொண்டர் படையணி பொதுமக்களின் வீடுகளை துப்பரவு செய்வதையும், அரச அதிகாரிகள் ஒருசில இடங்களில் மக்களின் பாதிப்புக்கள் தொடர்பாகவும், அவர்களின் குடும்ப விபரங்கள் தொடர்பாகவும் தகவல்களை திரட்டுவதையும் அவதானிக்க முடிந்நதுடன் ஏனைய பல இடங்களுக்கு தொண்டர்களோ அல்லது அரசின் அதிகாரிகளோ செல்லாத நிலைமைகளையும் காண முடிந்ததுடன் பொதுமக்களும் தமது ஆதங்கத்தினையும், அதிர்ப்தியினையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பொதுமக்கள் தத்தமது வீடுகளில் இருந்து பாவனைக்கு உதவாது அழிவடைந்த வீட்டுப் பொருட்களையும் கழிவுகளையும் வீதிகளின் இரு மருங்குகளிலும் போட்டுக் கொண்டிருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் பாரிய பணிகளில் கொழும்புப் பிரதேசத்தின் பிரதேச மற்றும் நகர சபை சுத்திகரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததையும், நீர், மின்சாரம், தொலைபேசிச் சேவைகளை சீர் செய்யும் பணிகளில் அந்தந்த திணைக்களங்கள் ஈடுபட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது. 

இவ்வாறான நிலையில் மக்கள் இன்னும் பூரணமான எந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ள வில்லை என்பதனையும், அவர்கள் அடிப்படை வசதிகளுக்கான உதவிகளை உடன் தந்துவுமாறு கேட்பதுடன், அரச அதிகாரிகளை தத்தது வீடுகளுக்கு வந்து தகவல்களைப் பெற்று அதன் மூலம் தமது பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்வதை அப்பிரதேசங்களுக்கு நேரில் சென்றபோது அவர்கள் மூலம் அறிய முடிந்தது.

இன்னும் ஓரிரு தினங்களில் கழிவுப் பொருட்களை அகற்றா விட்டால் நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியாதளவு துர்நாற்றம் வீசுவதற்கும், பாரிய சுகாதார சீர் கேடுகளும் ஏற்படும் நிலைமைகளும் காணப்படுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -