வாகனங்களின் விலை அதிகரிப்பு : விபரம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.  வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார். 

அதன்படி 1000cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. 

வேன் மற்றும் லொறிகளின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அதிகரிப்பு விபரங்கள் வருமாறு, 

முச்சக்கர வண்டிக்காக வரி மாத்திரம் 400,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. 
டொயோட்டா ப்ரியஸ் (Toyota Prius) வகை காருக்கான வரி 3,300,000 ரூபாவில் இருந்து 7,200,000 வரை அதிகரிக்கிறது. 
நிசான் எக்ஸ் ட்ரயல் (Nissan X-trail) 4,000,000 ரூபா வரியில் இருந்து 8,000,000 வரை அதிகரிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -