கம்பளை, சக்கரம்கொடுவ பிரதேசத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட சிறிய அளவிலான மண் சரிவு அபாயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை (21) சென்று பார்வையிட்டதோடு, மேலும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என அச்சம் நிலவும் வீடுகளில் வசிப்பவர்களையும் சந்தித்து நிலைமை பற்றி உரையாடினார்.
சிறிய வீடுகளிலும் தரையிலும் காணப்படும் சிறிய வெடிப்புகளையும் அவர் அவதானித்தார். மழை தொடர்ந்து நீடிக்குமானால், அங்கு குடியிருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் ஆலோசனை வழங்கினார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் உயர் அதிகாரிகளோடும் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.