நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்று (22) காலை வரையில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 118 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இவ்வசாதாரண காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு என்பவற்றில் இதுவரை 29 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 348476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 476 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 3699 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை இவர்களில், 57ஆயிரத்து 590 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 42 ஆயிரத்து 927 பேர் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக 399 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளனர்.