முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என கூறப்படும் தெஹிவளையிலுள்ள வீடொன்று தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்ற வேளையிலேயே விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இதன்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த காணி யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டியால் வழங்கப்பட்டது என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த காணி, பரிசாக வழங்கப்பட்ட காணி உறுதிப் பத்திரமாகவே காணப்படுகின்றது எனவும், அது தவறான விடயம் அல்லவெனவும் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளை பொலிஸ் நிதி மோசடி பிரிவு உரிய முறையில் முன்னெடுக்கவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.