மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களின் 28 வருட ஊடக சேவையை கௌரவிக்கும் வகையில் மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவும்,அவர் பற்றிய மலர் வெளியீடும் எதிர் வரும் சனிக்கிழமை (2016-05-28) காலை 9.00 மணிக்கு மருதமுனை மருதூர் கனி நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் கவிஞர் எம்.பி.அபுல் ஹஸன் (மருதமுனை ஹஸன்) தலைமையில் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அஹமட் (அம்ரிதாயெயம்) ஆகியோர் பத்திரிகையாளர் பற்றி விஷேட உரையாற்றவுள்ளனர்.
கவிஞர் ஏ.எம்.குர்சித் நன்றியுரையாற்றவுள்ளார் ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கவுள்ளார்.

