பெண் ஒருவரின் ஆபாச படங்களை முகநூல் பக்கத்தில் பதிவு செய்த சந்தேக நபர் விளக்க மறியலில்..!

சியாத் அகமட் லெப்பை-
டந்த சில நாட்களுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் வெளியான பெண் ஒருத்தரின் ஆபாச படம் பலரை பரபரப்புக்குள்ளாக்கி ஒரு குடும்ப வாழ்க்கையை சீரழித்துள்ளது.

சம்பவம் குறித்து ஆபாச படத்தில் வெளியான பெண் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாவும் அவரை தற்கொலையில் இருந்து பாதுகாத்துள்ளதாகவும் பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான பதிவினை யார் செய்திருக்கக் கூடும் என குறித்த பெண்ணிடம் சில தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவலின்படி குறித்த பெணனனோடு நெருக்கமாக பலகிய ஒருவரே சந்தேகத்திற்கிடமாகியுள்ளதாகவும் குறித்த பெண்ணின் குடும்பத்தினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக குறித்த பெண் சந்தேகத்திற்குள்ளானவரிடம் தொலைபேசி அலைப்பினை மேற்கொண்டு சம்பவம் குறித்து அழுது அவரிடம் இருந்து சில உண்மைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் எமக்கு தெரிவித்திருந்தனர்.

அதனை தொடர்ந்தே சந்தேகத்திற்கிடமானவரை பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த 11-02-2016 திகதி முறைப்பாடிட்டிருந்தோம் என குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை நேற்று (15ம் திகதி) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைதானவரை இன்று (16) நீதிமன்றில் ஆஜர் படுத்தியிருந்தனர்

சம்பவம் குறித்த வழக்கில்; சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எஸ்.ஏ.அகமட் முனாசுடீன் அவர்களின் தலைமையில் சட்டத்தரணி ஏ.எம்.சாதீர், ஏ.எல்.எம்.ஹில்மி, எஸ்.டீ.எம்.ராசீக் என நான்கு சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜராகியிருந்ததோடு சந்தேக நபரான எதிர் தரப்புவாதியின் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர் வரும் மூன்றாம் மாதம் முதலாம் திகதி வரை மட்டக்கள்ப்பு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பொத்துவில் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -