எப்.முபாரக்-
திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிக்கு தகாத வார்த்தைகளைக் கூறிய 44 வயதுடைய நபருக்கு, 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனையும் 03 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனையும் வழங்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே, திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.
இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர், திருகோணமலை, ஜமாலியாவைப் பகுதியைச் சேர்ந்த முகம்மத் சரீப் அலாப்தீன் (44) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் 2015-11-16ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் கடமையாற்றும் டி.புனிதவதி என்ற சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது .
அவ்வழக்கின் குற்றப் பத்திரத்தை துறைமுகப் பொலிஸார், நீதிமன்றில் ஒப்படைத்த வேளை சட்டத்தரணிக்கு தகாத வார்த்தைகளினால் பேசியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நேரத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.