அ.மனீஹா-
பாலமுனை எஸ்.ஆர்.சி.அமைப்பினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகளுக்கான 2016ஆம் ஆண்டுக்கு சேர்த்தக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று வெள்ளிக்கிழமை 26 பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.சி.அமைப்பின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.ஆர்.றபானா பிரதம அதிதியாகவும், சிறுவர் பாதகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.றிபாஸ், சிறப்பு அதிதியாகவும், எஸ்.ஆர்.சி.அமைப்பின் உப தலைவரும் கணக்காளருமான எம்.எப்;.பர்ஹான், அமைப்பின் ஆலோசகர்களான கலா'ஷனம் பாலமுனை பாறூக், ஓய்வுபெற்ற அதிபர் எம்.சி.ஏ.சமது ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,கலந்து கொண்டனர்.
இதன் போது பாலமுனை அல்ஈமானிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி அல்-ஹாபிழ் எம்.எம்.முஜீஸினால்; விசேட துஆப் பிராத்தனையொன்றும் இடம்பெற்றதுடன் அதிதிகளினால் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வைக்கப்பட்டது.
இதில் எஸ்.ஆர்.சி அமைப்பின் பிரதி நிதிகள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.



