குளவி தாக்குதல் - 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை

க.கிஷாந்தன்-
க்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருளவள்ளி கீழ் பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இழக்காகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் 26.02.2016 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்காக அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 15 தொழிலாளர்களில் 13 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -