திருகோணமலையில் உடும்பு இறைச்சி வைத்திருந்தவர் கைது..!

எப்.முபாரக்-
திருகோணமலை, இரணக்கேணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை உடும்பு இறைச்சியுடன் கைதுசெய்யப்பட்ட நபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை பிணையில் செல்ல அனுமதியளித்த நீதவான், மார்ச் மாதம் 08ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், திருகோணமலை - இரணக் கேணி 02ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தங்கவேலாயுதம் தர்மதாஸ் (வயது 32) எனப் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வளர்க்கும் நாயை வைத்துக்கொண்டு மிருகங்களை வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சோதனைகளை மேற்கொண்டபோதே உடுப்பு இறைச்சி கைப்பற்றப்பட்டது.

மீட்கப்பட்ட 1 கிலோ 500 கிராம் இறைச்சியையும் பொலிஸார் நீதிமன்றில் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -